History

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலை வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த 2015 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்டு கடந்த 2016-17ம் கல்வி ஆண்டு முதல் தேனிமாவட்டம் வீரபாண்டியில் அரசு கல்லூரி தோற்றுவிப்பதற்கு அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக அரசு உயர்கல்வித்துறையால் வீரபாண்டி – தப்புக்குண்டு வழித்தடத்தில் பிரமாண்டமாகக் கல்லூரிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
கல்லூரி தற்காலிகமாக வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2016-17ம் கல்வி ஆண்டு முதல் இளங்கலை ஆங்கிலம், இளங்கலை பொருளியல், இளம் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளுடன் துவக்கப்பட்டு நடைபெற்றுவந்தது. மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால் புதிய கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவு இல்லை என்பதால் உடனடியாக அறிவியல் பாடப்பிரிவு குறிப்பாகக் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் பிரிவு துவக்கவேண்டும் என்ற தேனி மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று 2016ம் ஆண்டு தமிழக அரசின் உயர்கல்வித்துறையால் புதிதாக இளம் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கிட அரசாணை வெளியிடப்பட்டு பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
2017-18ம் கல்வியாண்டு முதல் புதிதாக இளம் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

 

2019 – 2020 கல்வியாண்டு முதல் இளங்கலை தமிழ் இளம் அறிவியல் கணிதவியல் முதுகலை ஆங்கிலம், பொருளியல் மற்றும் முது அறிவியல் கணிணி அறிவியல் பாடப்பிாிவுகள் துவங்கப்பட்டன.

 

இக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இணைவிப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்சமயம் இக்கல்லூரியில் 580 மாணவ / மாணவியர் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ / மாணவியர்கள் பயன்பெறும் வகையில் அரசு, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச விடுதி வசதி, பேருந்துவசதி என அனைத்து சலுகைகளும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.